மக்கள்தொகை கணக்கெடுப்பில் சுயமாக விவரங்களை சேர்க்கும் வசதி - மத்திய மந்திரி தகவல்
மக்கள்தொகை கணக்கெடுப்பில் சுயமாக விவரங்களை சேர்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி, 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதிவரை நடப்பதாக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக தள்ளி போடப்பட்டது.
இன்னும் மக்கள்தொகை கணக்கெடுப்பு தேதி முடிவு செய்யப்படவில்லை. முதல்முறையாக இந்த கணக்கெடுப்பு, மின்னணு முறையில் நடத்தப்படுகிறது. இதில், மக்கள் தாங்களாகவே மக்கள்தொகை விவரங்களை சேர்ப்பதற்கான வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story