இந்தியாவில், 4-ந்தேதி வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.21 லட்சம் - மத்திய அரசு தகவல்
இந்தியாவில், 4-ந்தேதி வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.21 லட்சம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் நிகழ்ந்த கொரோனா மரணங்கள் குறித்த கேள்விகளுக்கு மாநிலங்களவையில் நேற்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி பாரதி பிரவின் பவார் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
‘இந்தியா முழுவதும் 4-ந்தேதி (நேற்று முன்தினம்) வரை 5 லட்சத்து 21 ஆயிரத்து 358 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்த மரணங்கள் குறித்து அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசு விடுத்த அழைப்பை ஏற்று அறிக்கை அளித்த 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எங்கும் அத்தகைய மரணங்கள் பதிவானதாக தகவல் இல்லை’ என்று தெரிவித்தார்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மத்திய, மாநிலம் மற்றும் மாவட்டங்கள் அடிப்படையில் தலா ரூ.50 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கப்படுவதாக கூறிய பாரதி, இழப்பீட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளிப்படையாக வெளியிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story