நாட்டில் மொத்த கால்நடைகளின் எண்ணிக்கை 53.67 கோடி! மத்திய அரசு தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 April 2022 5:37 PM IST (Updated: 6 April 2022 5:37 PM IST)
t-max-icont-min-icon

20-வது கால்நடை கணக்கெடுப்பை 2019-ம் ஆண்டு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை நடத்தியது.

புதுடெல்லி,

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ருபாலா கீழ்காணும் தகவல்களை வழங்கினார். 

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பங்களிப்புடன் 20-வது கால்நடை கணக்கெடுப்பை 2019-ம் ஆண்டு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை நடத்தியது.

பதினாறு வகையான வீட்டு விலங்குகள் மற்றூம் பண்ணை பறவைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. டேப்லெட் கணினிகளைப் பயன்படுத்தி, களத்தில் இருந்து ஆன்லைன் பரிமாற்றம் மூலம் தரவை டிஜிட்டல்மயமாக்கும் முதல் முயற்சியாக 20-வது கால்நடை கணக்கெடுப்பு இருந்தது.

20-வது கால்நடை கணக்கெடுப்பின் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் பின்வருமாறு:

* நாட்டில் மொத்த கால்நடைகளின் எண்ணிக்கை (53,67,60,000) 53.67 கோடியாக உள்ளது. கால்நடை கணக்கெடுப்பு-2012-ஐ விட இது 4.8% அதிகம்.

 * கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் மொத்த கால்நடைகளின் எண்ணிக்கை  முறையே 51,41,10,000 (51.41 கோடி) மற்றும் 2,26,50,000 (2.26 கோடி) ஆகும். கிராமப்புறங்களின் பங்கு 95.78% ஆகவும் நகர்ப்புறங்களின் பங்கு 4.22% ஆகவும் உள்ளது.

Next Story