இந்தியாவில் ஒருவருக்கு புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பு


கோப்புக்காட்சி
x
கோப்புக்காட்சி
தினத்தந்தி 6 April 2022 6:02 PM IST (Updated: 6 April 2022 6:02 PM IST)
t-max-icont-min-icon

மும்பையில் ஒமைக்ரான் எக்ஸ்இ என்ற புதிய வகை ஒமைக்ரான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

இங்கிலாந்து நாட்டில் முதன் முறையாக ஒமைக்ரான் எக்ஸ்இ  என்ற வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஒமைக்ரான் எக்ஸ்இ  வகை வைரஸ் 10 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது. 

சீனாவில் பரவி வரும் புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பு மும்பையில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து, சீனா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் ஒருவருக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Next Story