கடந்த 5 ஆண்டுகளில் 13 சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன - மத்திய அரசு தகவல்
சர்வதேச நாடுகளுடன் இந்தியா 13 சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
புதுடெல்லி,
சர்வதேச நாடுகளுடன், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா 13 சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, இந்தியா தனது வர்த்தக பங்காளிகளுடன் 13 சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது.
அவற்றுள் சமீபத்தில் கையெழுத்தான இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (IndAus ECTA), இந்தியா-மொரிஷியஸ் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தம் (CECPA) மற்றும் இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் விரிவான கூட்டு ஒப்பந்தம் (CEPA) ஆகியவையும் அடங்கும்.
அத்துடன், இந்தியா 6 வரையறுக்கப்பட்ட முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த தகவலை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் இணை மந்திரி அனுப்ரியா படேல் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
1. இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA)
2. தெற்காசிய சுதந்திர வர்த்தகப் பகுதிக்கான ஒப்பந்தம் (SAFTA) (இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான்)
3. இந்தியா-நேபாள வர்த்தக ஒப்பந்தம்
4. வர்த்தகம், வியாபாரம் மற்றும் போக்குவரத்து தொடர்பான இந்தியா-பூடான் ஒப்பந்தம்
5. இந்தியா-தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் - ஆரம்ப அறுவடை திட்டம்
6. இந்தியா-சிங்கப்பூர் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்
7. இந்தியா-ஆசியான் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் - பொருட்கள், சேவைகள் மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் (புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம்)
8. இந்தியா-தென் கொரியா விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம்
9. இந்தியா-ஜப்பான் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம்
10. இந்தியா-மலேசியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்
11. இந்தியா-மொரிஷியஸ் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தம்
12. இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் விரிவான கூட்டு ஒப்பந்தம்
13. இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம்
மேற்கண்ட ஒப்பந்தங்களின் பொருளாதார தாக்க மதிப்பீட்டில், ஒப்பந்தம் செய்யப்பட்ட நாடுகளுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த ஒப்பந்தங்களின் பொருளாதார தாக்க மதிப்பீடு, பங்குதாரர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலும் அவ்வப்போது தரவு பகுப்பாய்வு அடிப்படையிலும் மேற்கொள்ளப்படுகிறது.
Related Tags :
Next Story