சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் 2024ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்: மத்திய அரசு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 April 2022 3:39 PM IST (Updated: 7 April 2022 3:39 PM IST)
t-max-icont-min-icon

சென்னை-சேலம் இடையேயான பசுமைவழிச் சாலை திட்டம் 2024ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சென்னை-சேலம் இடையிலான பசுமை வழிச்சாலை திட்டத்தை 2024 ஆம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மாநிலங்களவையில் பதிலளித்து பேசிய மந்திரி நிதின் கட்காரி, நாடு முழுவதும் ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 8,301 கிமீ நீளமுள்ள 22 பசுமை வழிச்சாலை திட்டங்கள் அமைக்க உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் சென்னை- பெங்களூரு மற்றும் சென்னை-சேலம் இடையே 2 பசுமை வழிச்சாலைகள் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் சென்னை- பெங்களூரு இடையே 282 கிமீ நீளமுள்ள சாலை அமைக்கும் பணிகளில் 45 கிமீ நீளமுள்ள சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சென்னை- சேலம் இடையிலான 277 கிமீ நீளமுள்ள பசுமை வழிச்சாலை அமைக்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று கூறிய அவர், வரும் 2024 ஆம் ஆண்டிற்குள் பணிகள் அனைத்தும்  முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story