தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு மின் சீர்திருத்த திட்ட பணிகளுக்கு கூடுதலாக ரூ.28,204 கோடி ஒதுக்கீடு
நாட்டில் உள்ள மாநிலங்களுக்கு மின் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள நடப்பு ஆண்டில் ரூ.1,22,551 கோடி ஊக்கத்தொகை அளிக்கப்பட உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு மின் சீர்திருத்த திட்ட பணிகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவித்து உள்ளது.
இதன்படி, தமிழகம், ஆந்திர பிரதேசம், அசாம், இமாசல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.28,204 கோடி கூடுதல் நிதி கிடைக்கும்.
இது தவிர்த்து, நடப்பு 2022-23ம் ஆண்டில் நாட்டில் உள்ள மாநிலங்களுக்கு மின் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்காக ஊக்கத்தொகையாக ரூ.1,22,551 கோடி அளிக்கப்பட உள்ளது என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க, அதனை ஊக்குவிக்கும் வகையில் அரசின் இந்த நடவடிக்கை அமையும்.
Related Tags :
Next Story