மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்குடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு


மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்குடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
x
தினத்தந்தி 7 April 2022 5:40 PM IST (Updated: 7 April 2022 5:40 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி உடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்தார்.

புதுடெல்லி,

மூன்று நாள் பயணமாக இன்று டெல்லி சென்றுள்ள தமிழக கவர்னர்  ஆர்என் ரவி, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜிநாத் சிங்கை சந்தித்து தற்போது ஆலோசித்து வருகிறார். கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நடந்து வருகிறது. 

இந்த சந்திப்பில் தமிழகம் சார்ந்த விஷயங்கள் குறித்தும், இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதன்பின் நாளை பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட முக்கிய மந்திரிகளை, தமிழக கவர்னர் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story