ஆகர் பட்டேல்: 'லுக் அவுட்' நோட்டீஸ் திரும்பப்பெற டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
ஆகர் படேலுக்கு எதிராக விடப்பட்ட 'லுக் அவுட்' நோட்டீசை திரும்பப்பெற சிபிஐக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
ஆம்னஸ்டி அமைப்பின் முன்னாள் தலைவரும் எழுத்தாளருமான ஆகார் படேல், அமெரிக்கா செல்வதற்காக நேற்று பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். அவர் மீது லுக்-அவுட் நோட்டீஸ் இருப்பதாகக் கூறி, குடிவரவு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி மாநகர அமர்வு நீதிமன்றத்தில் ஆகார் படேல் நேற்று வழக்கு தொடுத்தார். அந்த மனு குறித்து விளக்கம் அளிக்குமாறு சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், ஆகர் படேலுக்கு எதிராக விடப்பட்ட 'லுக் அவுட்' நோட்டீசை திரும்பப்பெற சிபிஐக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story