மேலும் 1,109 பேருக்கு கொரோனா: பலி எண்ணிக்கை 43 ஆக சரிவு
இந்தியாவில் மேலும் 1,109 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 43 ஆக சரிந்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி,
இந்தியாவில் நேற்று முன் தினம் 1,086 நேற்று 1,033 ஆக இருந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து 1,109 ஆனது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,30,31,958 லிருந்து 4,30,33,057 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,213 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,98,789 லிருந்து 4,25,00,002 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 43 பேர் உயிரிழந்தனர். இதுவரை 5,21,573 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,492 ஆக குறைந்தது. இந்தியாவில் ஒரே நாளில் 16,80,118 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 185.38 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story