முதல்-மந்திரி வேட்பாளராக ஏற்க மாயாவதி மறுத்தது ஏன்...? ராகுல் காந்தி விளக்கம்
உத்தர பிரதேசத்தில் சமீபத்திய சட்டசபை தேர்தலில் மாயாவதியை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க முன் வந்தும், அவர் எங்களுடன் பேச கூட இல்லை என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ.க. மீண்டும் அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தலில், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளும் போட்டியை எதிர்கொண்டன.
எனினும், தொடர்ந்து 2வது முறையாக பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
அவர் தலித் உண்மைகள் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின் பேசும்போது, அரசியல் சாசனம் என்பது ஓர் ஆயுதம். ஆனால், அமைப்புகள் இல்லாமல் அது அர்த்தமற்ற ஒன்றாகி விடும். அந்த அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி வைத்துள்ளது என கூறினார்.
அவர் பின்னர் தொடர்ந்து பேசும்போது, சமீபத்தில் நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலின்போது, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சி முன்வந்தது.
அவரை (மாயாவதியை) முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கவும் முன் வந்தோம். ஆனால், அவர் எங்களுடன் பேசக்கூட இல்லை. ஏனெனில், சி.பி.ஐ., அமலாக்க துறை மற்றும் பெகாசஸ் ஆகியவற்றுக்கு அவர் பயந்து விட்டார்.
இதனால், ஆளும் பா.ஜ.க.வுக்கு வெற்றி பெற தெளிவான பாதை அமைத்து தந்து விட்டார் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story