இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம்


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
x
தினத்தந்தி 9 April 2022 9:09 PM IST (Updated: 9 April 2022 9:09 PM IST)
t-max-icont-min-icon

2.46 லட்சம் பேர் பின்பற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் முடக்கப்பட்டு உள்ளது.



புதுடெல்லி,



நாட்டின் தட்பவெப்ப நிலை, மழை, புயல், சூறாவளி காற்று உள்ளிட்ட வானிலை நிலவரங்களை அவ்வப்போது பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களை எச்சரிக்கையுடன் இருக்க செய்யும் பணியில் இந்திய வானிலை ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2.46 லட்சம் பேர் பின்பற்றும் இந்த மையத்தின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் முடக்கி உள்ளனர்.  இதுபற்றி அந்த மையத்தின் இயக்குனர்-ஜெனரல் மிருத்யுஞ்ஜெய் மகாபத்ரா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது.

அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என கூறியுள்ளார்.  உத்தர பிரதேச முதல்-மந்திரி அலுவலகத்தின் டுவிட்டர் கணக்கு நேற்றிரவு திடீரென மர்ம நபர்களால் முடக்கப்பட்டது.

எனினும், பின்னர் அது மீட்டெடுக்கப்பட்டு விட்டது.  இந்த விவகாரத்தில் சைபர் பாதுகாப்பு நிபுணர்களை கொண்டு உத்தர பிரதேச அரசு மர்ம நபர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணையை தொடங்கி உள்ளது.




Next Story