பிரான்ஸ் அதிபர் தேர்தல் - புதுச்சேரியில் வாக்குப்பதிவு துவக்கம்


பிரான்ஸ் அதிபர் தேர்தல் - புதுச்சேரியில் வாக்குப்பதிவு துவக்கம்
x
தினத்தந்தி 10 April 2022 10:22 AM IST (Updated: 10 April 2022 10:22 AM IST)
t-max-icont-min-icon

பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதுச்சேரியில் தொடங்கியது.

புதுச்சேரி,

பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த பதவிக்கு 12பேர் போட்டியிடுகின்றனர். பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே இந்த தேர்தலில் வாக்களிக்க முடியும். 

புதுச்சேரியில் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். தற்போது பிரெஞ்ச் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக புதுச்சேரியில் இரு இடங்களிலும், காரைக்காலில் ஒரு இடத்திலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இன்று காலை 8 மணியளவில் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், புதுச்சேரியில் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்து வருகின்றனர். அவர்கள் பிரெஞ்ச் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதற்காக அடையாள அட்டையை சரிபார்த்த பின்னரே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 


Next Story