கேரளாவில் களைகட்டிய குருத்தோலை பவனி..! நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு


கேரளாவில் களைகட்டிய குருத்தோலை பவனி..! நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 10 April 2022 3:37 PM IST (Updated: 10 April 2022 3:37 PM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை பவனி இன்று கொண்டாடப்பட்டது.

திருவனந்தபுரம்,

குருத்தோலை பவனி என்பது ஜெருசலேமுக்குள் இயேசு கிறிஸ்து வெற்றிகரமாக நுழைந்ததைக் கௌரவிக்கும் ஒரு கொண்டாட்டமாகும். இந்த நிகழ்வு அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன், அவரது இறுதி நாட்களில் நடைபெற்ற நிகழ்வாக கிறிஸ்துவ மக்களால் கருதப்படுகிறது.

கேரளாவில்  திருவனந்தபுரம், கோட்டயம் உட்பட மாநிலம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் இன்று குருத்தோலை பவனி விமரிசையாக கொண்டாடப்பட்டது.
திருவனந்தபுரத்தில் உள்ள புனித ஜோசப் பெருநகர பேராலயத்தில் இருந்து பக்தர்கள் ஊர்வலம் சென்றனர்.

கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின்னர், கொரோனா பெருந்தொற்றால் நடைபெறாமல் இருந்த  கூட்டு பிரார்த்தனை மற்றும் பவனி இன்று விமரிசையாக நடைபெற்றது.



பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். குருத்தோலை பவனியில்  கைகளில் குருத்தோலைகளை ஏந்தி உன்னதங்களிலே ஓசன்னா, தாவீதின் மைந்தனே ஓசன்னா, ஆண்டவர்  பெயரால் வருகிறவர் ஓசன்னா என பாடல்களை பாடி பவனியாக சென்றனர். 

திருவனந்தபுரம் லத்தீன் மறைமாவட்ட ஆயர் தாமஸ் ஜே நெட்டோ பாம் ஞாயிறு ஆராதனைகளை வழங்கினார்.

Next Story