கொரோனா இன்னும் ஓயவில்லை- பிரதமர் மோடி எச்சரிக்கை


கொரோனா இன்னும் ஓயவில்லை- பிரதமர் மோடி எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 April 2022 5:44 PM IST (Updated: 10 April 2022 5:44 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா இன்னும் நீங்கவில்லை, தனது வடிவத்தை மாற்றி மீண்டும் பரவுகிறது என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

புதுடெல்லி,

ராம நவமி கொண்டாட்டத்தையொட்டி,  குஜராத் மாநிலம் கதிலாவில் அமைந்திருக்கும் உமியா மாதா கோவில் நிறுவன தின விழாவில் காணொலி முலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

கொரோனா பெருந்தொற்று மிகப்பெரும் நெருக்கடி. இந்த நெருக்கடி ஓய்ந்துவிட்டதாக நாங்கள் கூறவில்லை. தற்போது தொற்று பரவல் நின்றிருக்கலாம். ஆனால், அது மீண்டும் எப்போது பரவும் என்பது நமக்குத் தெரியாது.  கொரோனா தொற்று நாட்டை விட்டு முற்றிலும் நீங்கவில்லை,கொரோனா நெருக்கடி முடிந்து விட்டது என்று நாங்கள் கூறவில்லை. 

வடிவங்களை மாற்றி மீண்டும் அது பரவுகிறது. இதனால் பெருந்தொற்று நோய்க்கு எதிரான போரில் மக்கள் தங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கைவிடக் கூடாது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கிட்டத்தட்ட 185 கோடி டோஸ் தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளது. இது ஒட்டு மொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  உங்களின்  ஆதரவுடன் இது சாத்தியமாகி உள்ளது” என்றார்.

Next Story