கோவா வன பகுதியில் ரஷியர் மர்ம மரணம்


கோவா வன பகுதியில் ரஷியர் மர்ம மரணம்
x
தினத்தந்தி 10 April 2022 9:49 PM IST (Updated: 10 April 2022 9:49 PM IST)
t-max-icont-min-icon

கோவாவின் வன பகுதியில் ரஷியர் ஒருவர் இன்று மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார்.




வடக்கு கோவா,


வடக்கு கோவாவின் கார்காவ் நகரில் பத்வாடி என்ற இடத்தில் அமைந்த வனப்பகுதியில் வெளிநாட்டுக்காரர் ஒருவரின் உடலை இன்று காலை போலீசார் கைப்பற்றினர்.  அதுபற்றிய முதல் கட்ட விசாரணையில், அவர் ரஷிய நாட்டை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு சோபித் டி சக்சேனா கூறும்போது, வடக்கு கோவாவின் கார்காவில் அழுகிய நிலையில் உடல் ஒன்று கைப்பற்றப்பட்டு உள்ளது.

வெளிநாட்டை சேர்ந்த அவர், ரஷியர் என அறியப்படுகிறது.  அவரது பெயர் வைட்டாலி.  அவரது உடைகள், பை, ஆவணங்கள் மற்றும் மொபைல் போன்கள் ஆகியவற்றை கொண்டு அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.  அவரது உடல் கோவா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசாதனை நடைபெறுகிறது.  அதன் முடிவு வந்த பின்னரே மரணத்திற்கான காரணம் என்ன என்பது தெரிய வரும் என்று கூறியுள்ளார்.




Next Story