பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் பங்கேற்ற விழாவில் வெடி குண்டு வீசப்பட்டதால் பதற்றம்


பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் பங்கேற்ற விழாவில் வெடி குண்டு வீசப்பட்டதால் பதற்றம்
x
தினத்தந்தி 12 April 2022 5:12 PM IST (Updated: 12 April 2022 5:12 PM IST)
t-max-icont-min-icon

பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் நாளந்தா அருகே உள்ள ஜன்சபா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பாட்னா,

பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் நாளந்தா நகரில் ஜன்சபா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிதிஷ் குமார்  இருந்த மேடை அருகே நாட்டு வெடி குண்டு வீசப்பட்டது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் எந்த அசம்பாதவிமும் ஏற்படவில்லை. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசர், நிதிஷ்குமாரை பத்திரமாக அழைத்துச்சென்றனர்.

தொடர்ந்து , வெடி குண்டு வீச்சு தொடர்பாக ஒருவரை பிடித்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில், பொது நிகழ்ச்சி ஒன்றில் நிதிஷ்குமாரை ஒருவர் தாக்கிய நிலையில், தற்போது அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story