2 ஆண்டுகளுக்கு பின் அமர்நாத் யாத்திரைக்கு அனுமதி - யாருக்கெல்லாம் அனுமதி?
அமர்நாத் யாத்திரைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர்,
காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்திரைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், யாத்திரைக்கு யாருக்கெல்லாம் அனுமதி என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 13 வயது முதல் 75 வயதிற்கு உட்பட்டோர் யாத்திரைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வருகிற 30 ஆம் தேதி யாத்திரை தொடங்க உள்ள நிலையில், இதற்கென உள்ள இணையதளம் மற்றும் மொபைல் செயலிகளில் அமர்நாத் யாத்திரைக்காக முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story