ரோப் கார் விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு


ரோப் கார் விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு
x
தினத்தந்தி 12 April 2022 10:28 PM IST (Updated: 12 April 2022 10:28 PM IST)
t-max-icont-min-icon

ஜார்க்கண்ட் ரோப் கார் விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தியோகர்,

சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்று பாபா வைத்யநாத் கோவில். இது ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ளது. திரிகுட் மலை மீது சென்று இந்த கோவிலுக்கு தரிசனம் செய்ய சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு வசதியாக மாநில சுற்றுலாத்துறை சார்பில் ரோப் கார் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் மிக உயரமான செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் இதுவாகும். 1,500 அடி உயரம் கொண்ட திரிகுட் மலையில் அமைந்துள்ள இந்த ரோப் கார் 766 மீட்டர் நீளம் கொண்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ரோப் கார்கள் மூலம் கோவிலுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் உள்பட 48-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். ரோப் கார்கள் மலை உச்சியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து போலீசார் மற்றும் மீட்புக்குழுவினருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் திரிகுட் மலையில், இந்திய விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் மீட்பு பணி நடந்தது.

இந்த விபத்தில்  3 பேர் பலியாயினர். இதையடுத்து பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாநில முதல்-மந்திரி ஹே மந்த் சோரன் அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

Next Story