கோடைமழை எதிரொலி: முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


கோடைமழை எதிரொலி: முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 13 April 2022 5:40 AM IST (Updated: 13 April 2022 5:40 AM IST)
t-max-icont-min-icon

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது.

கூடலூர், 

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைத்து கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடைமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 850 கன அடி வீதம் நீர்வரத்து இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கோடைமழை தீவிரம் அடைந்து உள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு, வினாடிக்கு 1,975 கனஅடி நீர்வரத்து அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. முல்லைப்பெரியாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 126.50 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Next Story