கள்ளகாதலுக்கு இடையூறு:3 வயது சிறுவனைக் கொன்ற கொடூர தாய்
பாலக்காடு அருகே கள்ளக்காதலனுடன் வாழ தடையாக இருந்த 3 வயது சிறுவனை கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.
பாலக்காடு,
கேரளா மாநிலம், பாலக்காடு ஏலப்புல்லி கிராமம் அருகே உள்ள நென்மேனியில் வசிப்பவர் சமீர். இவரது மனைவி ஆஷி (22). இவர்களுக்கு மூன்று வயதான முகமது சானு என்ற குழந்தை உள்ளது.
கடந்த இரண்டு வருடமாக கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை சிறுவன் முகமது ஷானு வீட்டின் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் பாலக்காடு கசபா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மர்மான முறையில் சிறுவன் இறந்தது குறித்து போலீசார் தாய் ஆஷியிடம் விசாரணை நடத்தினார்கள். ஆனால் அவர் குழந்தை இறந்தது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என கூறியுள்ளார். பின்னர் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உடனடியாக பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தார்கள்.
பிரேத பரிசோதனையில் சிறுவனின் கழுத்து இறுக்கப்பட்டு மூச்சு திணறி மரணம் நிகழ்ந்தது தெரியவந்தது. ஆகையால் போலீசாருக்கு தாய் ஆஷி மீது சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தனது கள்ளகாதலுக்கு தன் மகன் தடையாக இருப்பதால் கழுத்தை நெரித்து மூச்சை அடக்கி கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டார். பின்னர் போலீசார் தாயை கைது செய்து பாலக்காடு நீதிமன்றத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story