முஸ்லிம் பெண்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த சாமியார் கைது


முஸ்லிம் பெண்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த சாமியார் கைது
x
தினத்தந்தி 13 April 2022 9:09 PM IST (Updated: 13 April 2022 9:09 PM IST)
t-max-icont-min-icon

முஸ்லீம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன் என மிரட்டிய சர்ச்சைக்குரிய சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து மத சாமியார் ஒருவர் ஜீப்பில் இருந்தவாறு பொதுமக்கள் இடையே உரை நிகழ்த்தினார். 

அப்போது சீதாபூரில் உள்ள மசூதிக்கு அருகே ஜீப் சென்ற போது, "இந்தப் பகுதியில் எந்த இந்து பெண்களுக்காவது முஸ்லிம்கள் தொல்லை கொடுத்தால், இஸ்லாமிய பெண்களை கடத்திச் சென்று பொதுவெளியில் வைத்து அவர்களை பாலியல் வன்புணர்வு செய்வேன்" என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.  சாமியாரின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

சாமியார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். தேசிய மகளிர் ஆணையமும், காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதைத்தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சாமியாரின் சர்ச்சை பேச்சு வெளியாகி 11 நாட்கள் கழித்து இன்று அவரை போலீசார் கைது செய்துள்ளனர். 


Next Story