தோழியின் 9 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்


தோழியின் 9 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்
x
தினத்தந்தி 13 April 2022 9:21 PM IST (Updated: 13 April 2022 9:21 PM IST)
t-max-icont-min-icon

தோழியின் 9 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கள்ளியூர் பகுதி மைத்ரி நகரை சேர்ந்தவர் ஷிஜோம் (வயது 40). வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் தனது தோழியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ஷிஜோம் தனது தோழியின் 9 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார். இது குறித்து ரகசிய தகவல் கிடைத்த நிலையில் போலீசார் ஷிஜோமை இன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஷிஜோம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஷிஜோமிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story