விலைவாசி உயர்வுக்கு உலக நிலவரமே காரணம் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேட்டி


விலைவாசி உயர்வுக்கு உலக நிலவரமே காரணம் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேட்டி
x
தினத்தந்தி 14 April 2022 5:55 AM IST (Updated: 14 April 2022 5:55 AM IST)
t-max-icont-min-icon

கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரஷியா-உக்ரைன் போர், கொரோனா உள்ளிட்ட உலக நிலவரம்தான் விலைவாசி உயர்வுக்கு காரணம்.

புதுடெல்லி, 

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரஷியா-உக்ரைன் போர், கொரோனா உள்ளிட்ட உலக நிலவரம்தான் விலைவாசி உயர்வுக்கு காரணம். விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கான வரியை நீக்கி இருக்கிறோம்.

நம்மிடம் போதுமான உணவு தானியம் இருக்கிறது. அதனால்தான், நமது உணவு கையிருப்பை உலக நாடுகளுக்கு வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உணவு தானிய ஏற்றுமதிக்கு உலக நாடுகள் இந்தியாவை எதிர்பார்த்துள்ளன. கடந்த நிதி ஆண்டில் 70 லட்சம் டன் கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தோம். நடப்பு நிதிஆண்டில் 100 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story