ரெயில்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமா? ரெயில்வே விளக்கம்
டீசலில் இயங்கும் ரெயில்களில் பயணிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
புதுடெல்லி,
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் டீசலில் இயங்கும் ரெயில்களில் பயணிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
ஆனால் இந்த செய்திகளை ரெயில்வே மறுத்து உள்ளது. இது குறித்து ரெயில்வே வெளியிட்ட அறிக்கையில், ‘டீசலில் இயங்கும் ரெயில்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் ெரயில்வேயிடம் இல்லை என்பது சம்பந்தப்பட்ட அனைவரின் புரிதலுக்காக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான யூகங்கள் அனைத்தும் ஆதாரமற்றவை’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story