அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டில் சாதனை அளவாக புதிய மருத்துவர்கள்; பிரதமர் மோடி


அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டில் சாதனை அளவாக புதிய மருத்துவர்கள்; பிரதமர் மோடி
x

நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் சாதனை அளவாக புதிய மருத்துவர்கள் கிடைத்திடுவார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.



பூஜ்,



குஜராத்தின் பூஜ் மாவட்டத்தில் கே.கே. பட்டேல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே இன்று தொடங்கி வைத்து பேசினார்.  அவர் பேசும்போது, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பூஜ் நகர மக்களுக்கு முதன்முறையாக கிடைத்துள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை புதிய விதியை எழுதியுள்ளது.

200 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையானது, மலிவான கட்டணத்துடன், நல்ல தரமுள்ள மருத்துவ வசதிகளை மக்களுக்கு வழங்கும் என்று கூறியுள்ளார்.  இரு தசாப்தங்களுக்கு முன்பு, குஜராத்தில் 1,100 இடங்களுடன் கூடிய 9 மருத்துவ கல்லூரிகளே இருந்தன.  ஆனால் இன்று 6 ஆயிரம் இடங்களுடன் கூடிய 36 மருத்துவ கல்லூரிகள் உள்ளன.

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரிகளை கட்டுவது என்ற இலக்காலோ அல்லது அனைவருக்கும் மருத்துவ கல்வி கிடைக்க எடுக்கப்படும் முயற்சியாலோ, நாட்டுக்கு அடுத்த 10 ஆண்டுகளில் குறிப்பிட்ட அளவிலான புதிய மருத்துவர்கள் கிடைத்திடுவார்கள் என்று கூறியுள்ளார்.


Next Story