ஜார்க்கண்டில் கொடூரம்; பெண்ணை வைத்து தோழியையும் வரவழைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்
ஜார்க்கண்டில் பெண்ணை வைத்து அவரது தோழியையும் வரவழைத்து 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளது.
ராஞ்சி,
ஜார்க்கண்டில் ராஞ்சி நகரில் நேற்றிரவு பெண் ஒருவர் தனது வீட்டுக்கு சென்று கொண்டு இருந்துள்ளார். அவருடன் வந்த மற்றொரு நபர் நடுவழியில், 5 நபர்களை போனில் அழைத்துள்ளார்.
அவர்கள் வந்ததும் அனைவரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதன்பின்னர், அந்த பெண்ணின் தோழியையும் சம்பவ பகுதிக்கு வர சொல்லும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர். இதில், அந்த பகுதிக்கு சென்ற தோழியையும் அந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது என போலீசார் கூறியுள்ளனர்.
எனினும், 2வது பெண்ணிடம் விசாரணை நடத்தி உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த கும்பலை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ள போலீசார், தப்பியோடிய 6வது நபரை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story