ராமர் கடவுள் இல்லை, ஒரு கதாபாத்திரமே; பாஜக கூட்டணி கட்சித் தலைவர் பேச்சு


ராமர் கடவுள் இல்லை, ஒரு கதாபாத்திரமே; பாஜக கூட்டணி கட்சித் தலைவர் பேச்சு
x
தினத்தந்தி 15 April 2022 4:50 PM IST (Updated: 15 April 2022 4:55 PM IST)
t-max-icont-min-icon

ராமர் கடவுள் இல்ல, அவர் ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே என தேசிய ஜனாநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜித்தன் ராம் மன்ஜி தெரிவித்துள்ளார்.

பாட்னா,

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் `ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா'வின் தலைவரான மஞ்சி, அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், ``ராமர் கடவுள் இல்லை. அவர் கதையில் வரும் ஒரு கதாபாத்திம். துளசிதாஸ், வால்மீகி ஆகியோரின் கருத்துகளை பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம்தான் ராமர்.

துளசிதாஸ், வால்மீகி ஆகியோரின் எழுத்துக்களில் நல்ல கருத்துகள் நிறைந்திருக்கின்றன. நாங்கள் அவர்கள் இருவரையும் நம்புகிறோம்... ராமரை அல்ல. நீங்கள் ராமரை நம்பினால், சபரி கடித்துக் கொடுத்த பழத்தை ராமர் சாப்பிட்டதாக நாங்கள் கதைகளில் கேள்விப்பட்டிருக்கிறோம். 

நாங்கள் கடித்துக் கொடுத்தப் பழத்தை நீங்கள் சாப்பிட வேண்டாம். எங்கள் கைப்பட்ட பழத்தையாவது சாப்பிடுங்கள். இந்தியாவில் இங்கு, ஏழை - பணக்காரன் என இரண்டு சாதிகள் மட்டுமே உள்ளன" என்றார்.

Next Story