15 முதல் 18 வயது சிறுவர்களில் ஆந்திராவில் 100 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி


15 முதல் 18 வயது சிறுவர்களில் ஆந்திராவில் 100 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி
x
தினத்தந்தி 16 April 2022 2:28 AM IST (Updated: 16 April 2022 2:28 AM IST)
t-max-icont-min-icon

15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 3-ந் தேதி தொடங்கியது.

புதுடெல்லி, 

15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 3-ந் தேதி தொடங்கியது. இதில், ஆந்திராவில் இந்த வயதினர் 100 சதவீதம் பேரும் 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். அடுத்தபடியாக காஷ்மீரில் 83.6 சதவீதம்பேரும், இமாசலபிரதேசத்தில் 80.8 சதவீதம்பேரும் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 40 சதவீதத்துக்கும் குறைவானவர்கள்தான் 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். பட்டியலில் கடைசி இடத்தில் மேகாலயா உள்ளது. அங்கு 10 சதவீதம் பேர் மட்டுமே 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.

Next Story