டெல்லியில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா- இருவர் உயிரிழப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 10 ஆம் தேதி ஒருநாள் பாதிப்பு 141 ஆக இருந்தது. தொற்று பாதிப்பு விகிதம் 1.29 சதவிகிதமாக இருந்தது. ஆனால், இன்று தொற்று பாதிப்பு 461 ஆக உயர்ந்து அதிரவைத்துள்ளது.
தொற்று பாதிப்பு விகிதம் 5.33 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய 8646- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்தாலும் மக்கள் பீதி அடைய தேவையில்லை என்று டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் வரும் 20 ஆம் தேதி டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கூடுகிறது. இந்தக்கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டுமா? என்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனத்தெரிகிறது.
கொரோனா தொற்று தொடர்ந்து உயரும் பட்சத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை மீண்டும் தீவிரமாக பின்பற்ற வலியுறுத்தப்படும் எனத்தெரிகிறது.
Related Tags :
Next Story