2024-ம் ஆண்டுக்குள் 100 புதிய விமான நிலையங்கள் மத்திய அரசு திட்டம்


2024-ம் ஆண்டுக்குள் 100 புதிய விமான நிலையங்கள் மத்திய அரசு திட்டம்
x
தினத்தந்தி 16 April 2022 11:23 PM IST (Updated: 16 April 2022 11:23 PM IST)
t-max-icont-min-icon

உதான் திட்டத்தின் கீழ் சாமானிய மக்களும் விமான சேவையை பெற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

புதுடெல்லி, 

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் பிராந்திய இணைப்பு திட்டமான உதான் திட்டத்தின் கீழ் சாமானிய மக்களும் விமான சேவையை பெற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 415 வழித்தடங்கள் குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த திட்டம் 2020-ம் ஆண்டுக்கான பொது நிர்வாக பிரிவில் சிறந்த திட்டமாக பிரதமரின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 21-ந்தேதி டெல்லி விக்யான் பவனில் நடைபெறும் விழாவில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு இந்த விருது வழங்கப்படும் என அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விருது சுழற்கோப்பை, பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை கொண்டதாக இருக்கும்.

உதான் திட்டத்தின் கீழ் 2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 100 புதிய விமான நிலையங்களை அமைக்கவும், 2026-ம் ஆண்டுக்குள் 1,000 புதிய வழித்தடங்களில் விமானங்களை இயக்கவும் திட்டமிட்டு, அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Next Story