இந்தியாவில் புதிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 17 April 2022 12:33 AM IST (Updated: 17 April 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

இந்த தடுப்பூசிகளை 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 4 வாரங்கள் வைத்து பயன்படுத்தலாம்.

புதுடெல்லி, 

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனமும், உயிரி தொழில்நுட்ப ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான மைன்வாக்சும் இணைந்து கொரோனாவுக்கு எதிராக ஒரு புதிய தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசியை குளிர்சங்கிலி வசதியில் வைத்து பாதுகாக்கத்தேவையில்லை. இது ஒரு ‘வெப்ப நிலை’ தடுப்பூசி ஆகும்.

இந்த தடுப்பூசிகளை 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 4 வாரங்கள் வைத்து பயன்படுத்தலாம். 100 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 90 நிமிடங்கள் வைத்து பயன்படுத்த முடியும்.

இந்த தடுப்பூசியை எலிகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதில் தடுப்பூசிகள் டெல்டா, ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தியை பெறுவது தெரிய வந்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும், பைசர் தடுப்பூசிகளை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும் வைத்து பாதுகாக்க வேண்டும். இந்த தடுப்பூசி பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

Next Story