கர்நாடகா: நள்ளிரவில் பெய்த கனமழை - வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்...!
கர்நாடகாவில் நள்ளிரவில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று நள்ளிரவு கனமழை கொட்டித்தீர்த்தது. சித்பேட், சுல்தான்பேட், மஹரி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் சூழ்ந்தது.
கனமழை காரணமாக பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், கனமழை காரணமாகவும் போதிய வடிகால் அமைப்புகள் இல்லாததாலும் மழைநீர் வீடுகள், கடைகளுக்குள் புகுந்தது.
இதனால், குடியிருப்பு வாசிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். பெங்களூருவின் யலச்ஜனஹல்லி பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் இரவு முழுவதும் மக்கள் மிகுந்த அவதியடைந்தனர்.
Related Tags :
Next Story