டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை: 14 பேர் கைது


Photo Credit: ANI
x
Photo Credit: ANI
தினத்தந்தி 17 April 2022 2:39 PM IST (Updated: 17 April 2022 2:39 PM IST)
t-max-icont-min-icon

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த கேஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அணில் பைலாலை சந்திக்கிறார்.

புதுடெல்லி,

டெல்லி ஜஹாங்கீர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது நேற்று இரு பிரிவினர் இடையே மோதல் வெடித்தது. இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.  இந்த வன்முறை குறித்து விசாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. 

வன்முறை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி  முதல் மந்திரி அரவிந்த கேஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அணில் பைலாலை சந்திக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜனதா, சம்பவத்தின் பின்னணியில் சதி இருப்பதாக கூறியுள்ளது. 

இந்த சம்பவத்தின் பின்னணியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா வீடியோ செய்தியில் தெரிவித்துள்ளார்.


Next Story