"பணத்தை வைத்து அரசியல் செய்யும் நிலை"...யார் நேர்மையாக உள்ளனர்? - தேவகவுடா கேள்வி


பணத்தை வைத்து அரசியல் செய்யும் நிலை...யார் நேர்மையாக உள்ளனர்? - தேவகவுடா கேள்வி
x
தினத்தந்தி 17 April 2022 3:53 PM IST (Updated: 17 April 2022 3:53 PM IST)
t-max-icont-min-icon

அரசியலில் யாரும் மகான் இல்லை என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மந்திரி ஈசுவரப்பா 40 சதவீத கமிஷன் கேட்டதால் ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கர்நாடக அரசியல் விவகாரம் குறித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

கர்நாடகாவில் ஆளும் பாஜகவிற்கு எதிராக ஊழல் புகார் எழுந்துள்ள நிலையில், பணத்தை வைத்து அரசியல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதா? அரசியலில் யார் நேர்மையாக இருகின்றனர் என முன்னாள் பிரதமர் தேவகவுடா கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் சித்தாராமையா முதல்-மந்திரியாக இருந்த கர்நாடகத்திற்கு பிரசாரம் செய்ய வந்த பிரதமர் மோடி ஊழல் கமிஷனை குறிப்பிடும் விதமாக மாநில அரசையே 10 சதவீத அரசு என அழைத்ததாக தேவகவுடா கூறினார்.

பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். அரசியலில் யாரும் மகான் இல்லை என்று தேவேகவுடா கூறியுள்ளார்.

Next Story