மசூதிகளில் ஒலிபெருக்கியை அகற்றாவிட்டால் தட்டிக்கேட்போம்- ராஜ் தாக்கரே எச்சரிக்கை
மசூதிகளில் உள்ள ஒலிப்பெருக்கிகள் மே 3-ந் தேதிக்குள் அகற்றப்படவில்லை என்றால் தட்டிக்கேட்போம் என்று நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புனே,
மராட்டிய அரசு வருகிற மே 3-ந் தேதிக்குள் மசூதிகளில் உள்ள ஒலிப்பெருக்கியை அகற்றாவிட்டால் நாங்கள் மசூதிக்கு வெளியே அதிக சத்தத்துடன் அனுமன் மந்திரங்களை ஒலிப்போம் என மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே எச்சரித்து இருந்தார்.
இதற்கு மராட்டிய ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மதக்கலவரத்தை துண்டிவிட்டு, மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த சதி செய்வதாக குற்றம் சாட்டினர். இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியதாவது:-
மசூதிகளில் ஒலிப்பெருக்கியை வைப்பது மதம் சார்ந்த பிரச்சினையாக கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் இது சமூகம் சார்ந்த பிரச்சினை. நீங்கள் ஒரு நாளைக்கு 5 முறை ஒலிபெருக்கிகளை இசைக்க விரும்பினால், நாங்கள் மசூதிகளுக்கு முன்பு 5 முறை அனுமன் மந்திரங்களை ஒலிக்க செய்வோம்.
இதற்கு அனைத்து இந்து சகோதரர்களும் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்காக ரம்ஜான் பண்டிகை முடியும் மே 3-ந் தேதி வரை காத்திருப்போம். ஆனால் அவர்கள் தங்கள் மதம் நீதித்துறையை விட பெரியது என்று நினைத்து செயல்பட்டால் நாங்கள் தட்டிக்கேட்போம்” என்றார்.
Related Tags :
Next Story