"மத்திய அரசின் அலட்சியத்தால் 40 லட்சம் பேர் பலி" - ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு
கொரோனா பாதிப்புக்குள்ளாகி 40 லட்சம் இந்தியர்கள் பலியாகி உள்ளதாக ராகுல்காந்தி பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மறைத்திருப்பதாக, காங்., எம்.பி., ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி உண்மையை பேசவில்லை; மற்றவர்களையும் பேசவிடவில்லை. கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு யாரும் உயிரிழக்கவில்லை என தற்போது வரை பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் முன்பே கூறியது போல், கோவிட் காலத்தில், அரசின் அலட்சியத்தால் உயிரிழந்தது 5 லட்சம் பேர் கிடையாது. 40 லட்சம் இந்தியர்கள் பலியாகினர். மத்திய அரசு அதன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். கொரோனா பாதிப்புக்குள்ளான ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story