கேரளாவில் நிதி மந்திரி சென்ற காரின் டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு
கார் மிதமான வேகத்தில் சென்றதால் அசம்பாவித சம்பவம் ஏற்படவில்லை. விபத்தில் நிதி மந்திரி பாலகோபால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தின் நிதி மந்திரியாக இருப்பவர் பாலகோபால். இவர் நேற்றுமுன்தினம் இரவு திருவனந்தபுரத்தில் இருந்து காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். அப்போது குருவன்கோணம் பகுதியில் சென்றபோது திடீரென காரின் பின்பக்க டயர் கழன்று ஓடியது. இதனால் நிலைத்தடுமாறிய கார், சிறிது தூரம் தாறுமாறாக ஓடி சாலையோரம் மோதி நின்று விபத்துக்குள்ளானது.
கார் மிதமான வேகத்தில் சென்றதால் அசம்பாவித சம்பவம் ஏற்படவில்லை. விபத்தில் நிதி மந்திரி பாலகோபால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து மந்திரியின் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், நிதி மந்திரி பாலகோபால் ெசன்ற காரின் தகுதி மிகவும் மோசமாக இருந்தது தெரிய வந்துள்ளது. அந்த கார் 2 லட்சம் கிலோ மீட்டருக்கும் மேலாக ஓடி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story