சன்னி லியோன் ரசிகரா நீங்கள் ...! அப்படியனால் உங்களுக்கு அதிரடி தள்ளுபடி!


சன்னி லியோன் ரசிகரா நீங்கள் ...! அப்படியனால் உங்களுக்கு அதிரடி தள்ளுபடி!
x
தினத்தந்தி 18 April 2022 12:27 PM IST (Updated: 18 April 2022 12:27 PM IST)
t-max-icont-min-icon

நீங்கள் உண்மையான சன்னி லியோன் ரசிகர் என நிரூபித்தால் உங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.

பெங்களூரு

கர்நாடகாவில் உள்ள சன்னி லியோனின் ரசிகர் ஒருவர், சன்னி ரசிகர்களுக்கு தனது கடையில் விற்கப்படும் கோழிக்கறியில் 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 உங்களை சன்னி லியோனின் ரசிகன் என்று சொல்கிறீர்களா? சரி, நீங்கள் அதை நிரூபிக்க முடிந்தால் உங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி என்று கூறியுள்ளார்.  கர்நாடகாவின் மாண்டியாவில் உள்ள ஒரு கோழிக்கடையை சேர்ந்த பிரசாத் சன்னி ரசிகர்களை ஊக்குவிப்பதற்காக இந்த வினோத அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

மாண்டியா நகரில் 100 அடி சாலையில் உள்ள டிகே சிக்கன் சென்டரின் உரிமையாளரான பிரசாத், சன்னி லியோனின் ரசிகர்களை, வந்து நிரூபியுங்கள் என்று தனது கடையின் முன் பலகையை வைத்துள்ளார். 

இந்த அறிவிப்பு பலகை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் மூன்று நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் ஆண்டு முழுவதும் 10 சதவீத தள்ளுபடியை பிரசாத் வழங்குவதாக தெரிவித்துள்ளார். 

1. சன்னி லியோனை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பின்தொடர வேண்டும்.

2. போன் கேலரியில் சன்னி லியோனின் படங்கள் குறைந்தபட்சம் 10  இருக்க வேண்டும்.

3. சமூக ஊடகங்களில் சன்னியின் படங்களுக்கு லைக் மற்றும் கமெண்ட் செய்திருக்க வேண்டும்.

என கூறி உள்ளார்.

இதுகுறித்து பிரசாத் கூறியதாவது:-

பலர் சன்னி லியோனை மோசமான பார்வையில் பார்க்கிறார்கள். ஆனால் நான் அவர்களுடைய தீவிர ரசிகன். அவர் ஒரு அனாதை குழந்தையை தத்தெடுத்து மேலும் பல அனாதை குழந்தைகளுக்கு உதவியுள்ளார். அவர் தனது வருமானத்தில் பெரும் பகுதியை ஏழைகளுக்குச் செலவிடுகிறார். அதனால் இந்த சலுகையை அறிவித்துள்ளேன். சன்னியின் ரசிகர்கள் எப்போதும் எனது கடைக்கு வரவேற்கப்படுகிறார்கள்” என்று கூறி உள்ளார்.

Next Story