கர்நாடகா: மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 பேர் உயிரிழப்பு...!
கர்நாடகாவில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மங்களூருவில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் நேற்று இரவு அங்குள்ள மீன்களை சுத்தம் செய்த பிறகு அதன் கழிவுகளை சேகரித்து வைக்கும் தொட்டிக்குள் ஒரு தொழிலாளர் இறங்கியுள்ளார்.
அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து 7 பேர் ஒருவரையொருவர் காப்பாற்ற சென்றபோது 8 பேரும் மயக்கம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் மங்களூரிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவயிடம் சென்று அவர்களை மீட்டு மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சையிலிருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சமீருல்லா, இஸ்லாம், உமர் பாரூக், நிஜாமுதீன் என்பது தெரியவந்து உள்ளது.
Related Tags :
Next Story