பிரசாந்த் கிஷோர் உடன் சோனியா காந்தி மீண்டும் ஆலோசனை
டெல்லியில், பிரசாந்த் கிஷோர் உடன் சோனியா காந்தி மீண்டும் ஆலோசனை நடத்தியுள்ளார்.
புதுடெல்லி,
சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இது கட்சித்தொண்டர்கள் மட்டுமின்றி, கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடந்த கட்சியின் காரியக்கமிட்டி கூட்டத்தில், கட்சியை மறுசீரமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக கட்சியின் அமைப்பு தேர்தலை விரைவாக நடத்துவது, புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா, கடந்த சனிக்கிழமை உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.இதில் முக்கியமாக, பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டார். இது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றது.
இந்த நிலையில், டெல்லியில், பிரசாந்த் கிஷோர் உடன் சோனியா காந்தி மீண்டும் ஆலோசனை நடத்தியுள்ளார். பிரியங்கா காந்தி, முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story