11 லட்சம் மதிப்பிலான செல்போன் டவர் பேட்டரி திருட்டு - தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது..!
சித்தூர் அருகே சுமார் 11 லட்சம் மதிப்பிலான செல்போன் டவர் பேட்டரி திருடிய 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
சித்தூர்:
சித்தூர் பகுதியில் செல்போன் டவர்களில் உள்ள பேட்டரிகள் திருடு போவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விசாரிக்க சித்தூர் மாவட்ட எஸ்பி நிஷாந்த் ரெட்டி உத்தரவின்பேரில் டிஎஸ்பி சுதாகர் ரெட்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் சித்தூர் மாவட்டம் குடி பாலா பகுதியில் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் நான்கு திருடர்கள் உள்ளதாக ரகசிய தகவல் வந்தது. இதனடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அதில் அங்கு பதுங்கியிருந்த பார்த்திபன் (வயது 27), தனசேகர் (19), ராமராஜ் (33), அருண் (19) உள்ளிட்டோரை கைது செய்தனர்,
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் குடிபாலர் சுற்றி உள்ள பகுதிகளில் மட்டுமே செல்போன் டவர்களில் இருந்து திருடிய சுமார் 44 பேட்டரி திருரியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 11 லட்ச ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார் இவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கார், இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தீவிரமாக செயல்பட்டு திருடர்களை பிடித்தத குடி பாலா போலீஸ் நிலைய போலீசார் அனைவருக்கும் எஸ் பி வாழ்த்துக்களை தெரிவித்தார்
Related Tags :
Next Story