மருத்துவ சிகிச்சை: அமெரிக்கா செல்கிறார் பினராயி விஜயன்


மருத்துவ சிகிச்சை: அமெரிக்கா செல்கிறார் பினராயி விஜயன்
x
தினத்தந்தி 18 April 2022 8:01 PM IST (Updated: 18 April 2022 8:01 PM IST)
t-max-icont-min-icon

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், மருத்துவ சிகிச்சைக்காக இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்கிறார்.

திருவனந்தபுரம், 

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், மருத்துவ சிகிச்சைக்காக இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்கிறார்.  அவரது உடல் நலப் பிரச்னை குறித்து வெளியில் தெரிவிக்காத நிலையில், தனது மனைவி மற்றும் உதவியாளர்களுடன் இந்த மாத இறுதியில் அமெரிக்காவில் அமைந்துள்ள புகழ்பெற்ற மயோ மருத்துவமனைக்கு பினராயி விஜயன் செல்லவிருக்கிறார்.  சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்லவிருப்பது இது மூன்றாவது முறையாகும்.

இந்த நிலையில், ஏப்ரல் 23ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கும் பினராயி விஜயன், அடுத்த மாதம் நாடு திரும்புவார் எனவும் அங்கிருந்தபடியே  அமைச்சரவைக் கூட்டத்திலும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story