வருகிற 29-ந் தேதி கேரளா வரும் அமித்ஷா..!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 19 April 2022 4:14 AM IST (Updated: 19 April 2022 4:14 AM IST)
t-max-icont-min-icon

ஏப்ரல் 29-ந் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேரளா வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருவனந்தபுரம், 

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கேரள மாநிலத்திற்கு வருகிற 29-ந் தேதி வர உள்ளார். இந்த தகவலை, கேரள பா.ஜனதா தலைவர் கே.சுரேந்திரன் நேற்று தெரிவித்தார்.

கேரளாவில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரங்கள் குறித்து அறிந்து கொள்ளவும், கட்சி பிரமுகர்கள் கூட்டத்தில் பங்கேற்கவும் அவர் வருகை தர இருப்பதாக சுரேந்திரன் கூறி உள்ளார்.

Next Story