சர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை : மத்திய அரசு தகவல்


சர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை :  மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 19 April 2022 2:08 PM IST (Updated: 19 April 2022 2:08 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி, இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி ,

இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி, இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில், பிரேசில் நாட்டிற்கு அடுத்தப்படியாக இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில், 2021 - 2022ஆம் நிதியாண்டில் இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி மதிப்பு, 4.6 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 65 சதவீதம் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Next Story