போதை மருந்து கொடுத்து 3 நாட்கள் இருட்டறையில்...! பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...! அரசியல் பிரமுகர் மகன் கைது
பாதிக்கப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை சுயநினைவு பெற்று, கடத்தியவர்களிடமிருந்து தப்பினார்.
ஐதராபாத்
தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் கோடாட்டில் 20 வயது பெண், தனது தாயுடன் கோடாட்டில் வசிக்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை அந்த பெண் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கொண்டு இருந்தார். அப்போது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பிரமுகரும், வார்டு கவுன்சிலர் பாஷாவின் மகன் கவுஸ் மற்றும் அவரது நண்பர் சாய்ராம் ரெட்டி ஆகியோர் ஆட்டோ ரிக்ஷாவில் அந்த பெண்ணை கடத்திச் சென்றனர்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அந்த பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் அடைத்து வைத்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை சுயநினைவு பெற்று, கடத்தியவர்களிடமிருந்து தப்பினார். அவர் தனது தாயிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை அழுதபடியே கூறி உள்ளார். பின்னர் அவர்கள் காவல்துறையை அணுகினர். அவர்களின் புகாரின் அடிப்படையில், குற்றவாளிகள் இருவர் மீதும் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story