இந்து பெண்கள் 4 குழந்தைகள் பெற்று 2 குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ்-ல் சேர்க்க வேண்டும்"- பெண் சாமியார் சர்ச்சை பேச்சு


Image Courtesy: ANI
x
Image Courtesy: ANI
தினத்தந்தி 19 April 2022 5:21 PM IST (Updated: 19 April 2022 5:21 PM IST)
t-max-icont-min-icon

இந்து பெண்கள் 4 குழந்தைகள் பெற்று 2 குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ்-ல் சேர்க்க வேண்டும் என்று பெண் சாமியாரின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லக்னோ,

விஸ்வ இந்து பரிட்சுத் அமைப்பின் பெண்கள் பிரிவான துர்கா வாகினையை நிறுவியவர் பெண் சாமியாரான சாத்வி ரிதாம்பரா. இவர் பல்வேறு சர்ச்சை பேச்சுகளால் பிரபலமானவர்.

இந்நிலையில், உத்திர பிரதேசம் மாநிலம் கான்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பெண் சாமியார் சாத்வி ரிதாம்பரா பேசுகையில், 

இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டு பொறாமை கொண்டிருப்பவர்களே டெல்லி ஜஹங்கீர்புரி அனுமன் ஜெயந்தியில் வன்முறை ஏற்படுத்தியுள்ளனர். இதுபோன்ற அரசியல் பயங்கரவாதம் மூலமாக இந்து சமுதாயத்தை பிளவுப்படுத்த நினைப்பவர்கள் தவிடுபொடியாக்கப்படுவார்கள்.

இந்து பெண்கள் ஒவ்வொருவரும் தலா 4 குழந்தைகளை பெற்று கொள்ளவேண்டும் என்றும் அவற்றில் 2 குழந்தைகளை நாட்டிற்காக பணியாற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்க்க வேண்டும் என்று பேசினார்.

பெண் சாமியாரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story