உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது - விமான போக்குவரத்துத்துறை மந்திரி தகவல்
2 ஆண்டுகளுக்கு பிறகு உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளதாக ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் மீண்டும் பழையபடி இயங்க தொடங்கி உள்ளது. இதனால் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை 59 சதவீதம் அதிகரித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம்(ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் மட்டும் 2,838 விமானங்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 4 லட்சத்து 7 ஆயிரத்து 975 பயணிகள் பயணம் செய்து உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளதாக விமான போக்குவரத்துதுறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story