டெல்லி தலைமைச் செயலாளராக நரேஷ் குமார் ஐ.ஏ.எஸ். நியமனம்


டெல்லி தலைமைச் செயலாளராக நரேஷ் குமார் ஐ.ஏ.எஸ். நியமனம்
x
தினத்தந்தி 20 April 2022 2:10 AM IST (Updated: 20 April 2022 2:10 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியின் தலைமைச் செயலாராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நரேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் தலைமைச் செயலாளர் விஜய் தேவ் விருப்ப ஓய்வு பெற்றதையடுத்து, டெல்லியின் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நியமனம் வருகின்ற 21 ஆம் தேதி அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நரேஷ் குமார், அருணாச்சல பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த நிலையில் அவரை டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விருப்ப ஓய்வு பெற்ற விஜய் தேவ், மாநில தேர்தல் ஆணையராக வருகின்ற 21 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். 

இதற்கு முன்பு நரேஷ் குமார் டெல்லி மாநகராட்சி சேர்மனாகவும், டெல்லி போக்குவரத்துத்துறை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story