நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படும் அபாயம்: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம்
8 ஆண்டுகளாக பெரிய பேச்சுக்களின் விளைவுகளால் இந்தியாவில் வெறும் 8 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளது என பிரதமர் மோடியை ராகுல் சாடியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் வன்முறை நடைபெற்ற இடங்களில் ஆக்கிரமிப்புகள் புல்டோசர்கள் மூலம் அகற்றும் பணியை உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ராகுல் காந்தி பிரதமர் மோடியை சாடியுள்ளார்.
ராகுல் காந்தி தனது டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது:- “ 8 ஆண்டுகளாக பெரிய பேச்சுக்களின் விளைவுகளால் இந்தியாவில் வெறும் 8 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளது. மோடி ஜி, பணவீக்கம் அதிகரித்து வருகிறது. மின் வெட்டு சிறு தொழிற்சாலைகளை நசுக்கிவிடும். இதனால், வேலைவாய்ப்பு இன்மை அதிகரிக்கும். புல்டோசர்ஸ் வெறுப்புணர்வை நிறுத்தி விட்டு அனல் மின் நிலையங்களை ஆன் செய்யுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story